உலகப் பொதுமறையான திருக்குறள் எல்லோராலும் பாராட்டப்பட்டும் அவர்.அவர்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வாழ்வின் உன்னதமான நிலைப்பாட்டினை பளிங்குபோல எடுத்துரைக்கும் இந்நூலினை தெளிவுரையாக அதன் வடிவிலே எளிதாக படிக்காத நபருக்கும் புரியும்படி எழுதியுள்ளதையெண்ணி நாள் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன் . பலரும் பலவாறு எழுதிய உரைகள் , தெளிவுரைகள் , விளக்கங்கள்யாவும் கட்டுரை வடிவிலே உள்ளது இ ஆகையால் நான் மிகவும் மாறுபாடாக இதை குறளின் எனக்கு தெரிந்தவரை யாரும் இம்முயற்சியில் இறங்கி எழுதியதாக தெரியவில்லை அடியேனே முதல் ஆளாக எழுதி இருப்பதை நினைத்து நன்றியை நல்குகிறேன் . மாணவர்களுக்கு இந்நூல் உணர எளிதான தமிழ்வார்த்தைகளை உச்சரிக்கும்படியும் , ஊக்குவிக்கும்படியும் படித்து நல்லமுறையில் தேர்விலும் வெற்றிபெறுவதிலும் , மற்றவர்கள் படித்து பொருள் உணரும்படியும் எழுதியுள்ளேன் . அனைத்து குறள்களும் எல்லோரும் எளிமையாக அதிகமான குறள் களை படிக்க தூண்டும் ஆர்வம் ஏற்படும் , மக்களுக்கு புத்தகமாகவும் , வலைதளம் மூலமாகவும் , மின்னனுவாயிலாகவும் , குறுந்தகடு மூலமாகவும் வெளியிட்டு படித்து பயனடையுமாறு செய்ய எண்ணியுள்ளேன்.
Dr.V.P. CHELLAPANDIAN
M.Tech, Ph.D., (Engg), M.Sc.., (Valuation), Ph.D., (Vastu).,LLB..,
Structural Engineer & Valuer
VETRIVEL CONSTRUCTION
Plan & Estimation, 3D Elevation Valuation, Contract Work Ammonia Print, Vastu Consultant